இடிக்கப்பட்ட கராத்தே பயிற்சிக் கழகம்! HANNAH YEO விளக்கம்

top-news
FREE WEBSITE AD

Taman Sri Sinar பகுதியில் உள்ள பயிற்சிக் கழகத்தை இடித்தது முழுக்க முழுக்க கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் செயல் என இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ விளக்கமளித்தார். குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானச் செயலாக இதை வர்ணிக்க வேண்டாம் என்றும், இது குறித்து கோலாலம்பூர் நகராண்மைக் கழகமும் தேசிய நிலக் கட்டுமான நிர்மாணிப்புத் துறையினரும் சம்மந்தப்பட்ட பகுதி பொது இடத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக 30 நாள்களுக்கு முன்னமே சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள தளத்தைக் காலி செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் ஹன்னா இயோ விளக்கமளித்தார்.

இது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதோ, வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையோ இல்லை கடந்த ஓராண்டுகளில் கோலாலம்பூரில் பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள தளங்களை மீட்டெடுத்து வரும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட பொது தளத்திலிருந்து பொருள்களை அப்புறப்படுத்த 30 நாள்கள் அவகாசம் வழங்கியும் எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப்படாமல் சம்மந்தப்பட்ட தரப்பினர் வழங்கப்பட்ட அவகாசத்தைப் புறக்கணித்த நிலையில் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமானக் கட்டுமானத்தை மேற்கொண்டிருப்பவர்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது, இதனைச் சமூகப் பிரச்சணையாகவோ விளையாட்டு அமைச்டை வசைப்பாடுவதும் வேண்டாம் என செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோ கேட்டுக்கொண்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *