ஒழுக்கமற்ற 7 புத்தகங்களைத் தடை செய்த உள்துறை அமைச்சு!

- Sangeetha K Loganathan
- 27 May, 2025
மே 27,
மலேசியாவில் அச்சிடப்பட்ட 7 புத்தகங்களை உள்துறை அமைச்சு தடை செய்வதாக இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தகாத, ஒழுக்கமற்ற முன் அட்டைகளும் முறையற்ற உறவுகளுக்கிடையிலானத் தொடர்புகளை உற்கருத்தாக அமைக்கப்பட்டு அச்சிடப்பட்ட புத்தகங்கள் என அவை அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அந்த 7 புத்தகங்களையும் ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிக்குள் மீட்டுக் கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பதிப்பகத்திற்கு உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Ali Hazelwood எழுதிய Love, Theoretically, Bellesa எழுதிய Forbidden Love, Nur Firsha Nadia எழுதிய Darlingku Mr Cold Mafia, Aira Syuhairah எழுதிய Mischievous Killer, Shaz Johar எழுதிய Suhuf Abraham; Kougar 2, Elena Armas எழுதிய The American Roommate Experiment எனும் நூல்களின் உள்ளடக்கங்களை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படடையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு அறிவுருத்தியது. அச்சிடப்படும் நூல்கள் பொது வாசிப்பிற்கு உகந்த நூல்களா என்பதை உணர்ந்து எழுதவும் வெளியிடவும் வேண்டும் என உள்துறை அமைச்சு நினைவூட்டியது.
Kementerian Dalam Negeri mengharamkan tujuh buku termasuk karya antarabangsa dan tempatan kerana kandungan serta kulit buku yang tidak bermoral. Penerbit diarahkan menarik balik buku-buku tersebut antara 15 hingga 17 April lalu kerana tidak sesuai untuk bacaan umum.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *