அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ! 2 குழந்தைகள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி!

top-news

மே 22,

அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள 16 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவரும் 2 குழந்தைகளும் மூச்சுத்திணறலுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் சுங்கை பூலோவில் உள்ள Putra One Residences அடுக்குமாடிக் குடியிருப்பில் இத்தீவிபத்து ஏற்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்புப் படை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். 

தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 8 பேர் கொண்ட மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டில் சிக்கியிருந்த ஆடவர் ஒருவரையும் 2 குழந்தைகளையும் மீட்டதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள மற்ற வீடுகள் சேதமடையாமல் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் சம்மந்தப்பட்ட வீடு 80% தீயில் கருகியதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Kebakaran berlaku di tingkat 16 Putra One Residences, Sungai Buloh, menyebabkan seorang lelaki dan dua kanak-kanak sesak nafas. Mereka diselamatkan dan dirawat di hospital. Rumah tersebut musnah 80%, namun unit lain terselamat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *