தலைநகரில் 4 வணிகக் கடைகளை மூடிய KPDN!

- Sangeetha K Loganathan
- 17 Apr, 2025
ஏப்ரல் 17,
தலைநகர் Brickfields பகுதியில் வெளிநாட்டினர்களால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த 4 வணிகக் கடைகளைக் கோலாலம்பூர் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளில் மானிய விலையிலானப் பொருள்கள் விலைக் குறியீடு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கோலாலம்பூர் KPDN இயக்குநர் Mohd Shahran Mohd Arshad தெரிவித்தார்.
நேற்று இரவு 9 மணிக்குச் சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளைச் சோதனையிடும் போது வணிகக்கடைகள் வெளிநாட்டினர்களால் நடத்தப்படுது தெரிய வந்ததாகவும் சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளில் இருந்த 238 கிலோ சமையல் எண்ணெய், 64 பாக்கெட்டுகள் கோதுமை மாவு, 75 பாக்கெட்டுகள் சர்க்கரை, 28 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 4 வணிகக் கடைகளைத் தற்காலிகமாக மூடியதாகவும் கோலாலம்பூர் KPDN இயக்குநர் Mohd Shahran Mohd Arshad தெரிவித்தார்.
KPDN Kuala Lumpur menutup sementara empat kedai di Brickfields yang dikendalikan oleh warga asing. Kedai tersebut didapati menjual barangan bersubsidi tanpa label harga. Pelbagai barangan termasuk minyak masak dan gula turut dirampas semasa serbuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *