கார் விபத்தில் 6 மாதக் குழந்தை உட்பட நால்வர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 6 மாதக் குழைந்தையும் 17 முதல் 45 வயதுள்ள மூவரும் படுகாயம் அடைந்தனர். காலை 7.45 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ அமானிலிருந்து Kampung Punggu Dadak செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கிய 6 மாதக் குழந்தையும் மேலும் மூவரையும் மேலதிகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கானக் காரணத்தைக் காவல் துறை விசாரித்து வருவதாகவும் வாகனத்திலிருந்த 10 வயதுக்குற்பட்ட 3 சிறுவர்கள் எந்தவொரு காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Empat individu termasuk bayi enam bulan cedera dalam kemalangan di jalan Sri Aman ke Kampung Punggu Dadak, Sarawak. Tiada kematian dilaporkan. Mangsa dikejarkan ke hospital, sementara polis menyiasat punca kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *