விபத்தில் இருவர் பலி! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 24 May, 2025
மே 24,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் குவாந்தான் அருகில் பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Zahari Wan Busu தெரிவித்தார்.
கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த Nissan X-Trail வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதி எதிரில் வந்த Mercedes-Benz வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. Mercedes-Benz வாகனத்தில் இருந்த ஆடவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விபத்தை ஏற்படுத்த்திய Nissan X-Trail வாகனத்திலிருந்த 30 வயது பெண் ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் வாகனத்திலிருந்த ஒரு குழந்தை உட்பட மேலும் மூவர் படுகாயத்துடன் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Zahari Wan Busu தெரிவித்தார்.
Dua maut dan empat cedera termasuk seorang kanak-kanak dalam kemalangan melibatkan Nissan X-Trail dan Mercedes-Benz di Kuantan. Nissan hilang kawalan lalu merempuh tembok dan kenderaan lain. Mangsa dirawat di Hospital Tengku Ampuan Afzan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *