விபத்தில் 2 முதியவர் பலி! ஐவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 22 May, 2025
மே 22,
கட்டுப்பாட்டை இழந்த PROTON SAGA வாகனம் HILUX வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 2 முதியவர்கள் பலியானதுடன் மேலும் ஐவர் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு 8.19 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் 8 பேர் கொண்ட மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார்.
Jalan Kampung Kuala Slim சாலையில் சென்றுக்கொண்டிருந்த PROTON SAGA வாகனம் எதிரில் வந்த HILUX வாகனத்தை மோதியதில் PROTON SAGA வாகனத்திலிருந்த 73 வயது முதியவர்கள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்படுள்ளது. HILUX வாகனமோட்டி காயங்களின்றி தப்பிய நிலையில் வாகனத்திலிருந்த 4 வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் சிகிச்சைக்காக SLIM RIVER அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார்.
Dua warga emas maut dan lima lagi cedera parah dalam kemalangan membabitkan PROTON SAGA dan HILUX di Jalan Kampung Kuala Slim. Mangsa termasuk pelancong asing telah dibawa ke Hospital Slim River untuk rawatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *