நண்பனைக் கடத்தி பணம் கேட்ட மாணவன் கைது!

- Sangeetha K Loganathan
- 27 May, 2025
மே 27,
தனது பல்கலைக்கழக நண்பரைக் கடத்தி அவரின் தாயாரிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய 23 வயது பல்கலைக்கழக மாணவருக்கு RM 17,000 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீனாவைச் சேர்ந்த 23 வயது Zhang Runbao எனும் மாணவன் Ye Yingxi எனும் தனது நண்பரைக் கடத்தி, Ye Yingxiயின் தாயாரிடம் RM2.9 மில்லியன் பணத்தைப் பிணை தொகையாகக் கேட்டு Ye Yingxiயின் அரை நிர்வாணக் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
கடத்தல் நாடகத்தை நடத்திய 23 வயது Zhang Runbao சீனா நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் பாதிக்கப்பட்ட தாயாரிடம் சீனா நாட்டின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும்படி வலியுறுத்தியதும் பாதிக்கப்பட்ட தாயார் சந்தேகத்தின் அடிப்படையில் Zhang Runbao மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கடந்த மே 2 ஆம் நாள் தலைநகர் கோலாலம்பூரில் Jalan Tunku Abdul Rahman உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரவு 9.15 மணிக்குச் சந்தேகநபரான 23 வயது Zhang Runbao கைது செய்யப்பட்டார். RM 17,000 ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை விதிக்கபடும் என அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Seorang pelajar universiti warga China didenda RM17,000 oleh Mahkamah Sesyen Kuala Lumpur selepas mengaku bersalah menipu ibu rakannya melalui lakonan penculikan bagi mendapatkan wang tebusan RM2.9 juta. Dia berdepan enam bulan penjara jika gagal membayar denda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *