Lim Guan Eng சம்மந்தப்பட்ட RM 6.3 மில்லியன் ஊழல் வழக்கு அடுத்த மாதம் விசாரிக்கப்படும்! மே 27,

- Sangeetha K Loganathan
- 27 May, 2025
மே 27,
டி.ஏ.பி கட்சியின் முன்னாள் தலைவரும் பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சருமான Lim Guan Eng சம்மந்தப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் ஜூன் 24 தொடர்வதாகப் பினாங்கு Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பினாங்கின் பிரதானச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கடலுக்கடியில் அமைக்கவிருக்கும் சுரங்கப் பாதைக்குமானத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட குத்தகையின் தொடர்பாக Lim Guan Eng 10 முதல் 20 விழுக்காடுகள் லஞ்சமாகக் கேட்டதாகவும் பினாங்கு மாநிலத்திற்குச் சொந்தமான 2 தீவுகளைத் தனியாருக்கு வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டதாக Lim Guan Eng மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய சாட்சிகளின் விசாரணையின் போது Lim Guan Eng பினாங்கு மாநில முதலமைச்சராக இருந்த போது அதிகாலை 2 மணியளவில் Syed Putra, Mid Valley City தங்கும் விடுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கானத் திட்டத்தைக் கையொப்பமிட சுமார் RM3.3 மில்லியன் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை அடுத்த ஜூன் 24 விசாரிக்கவிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட சாட்சியை நேரில் ஆஜராகும்படியும் பினாங்கு Sesyen நீதிமன்ற நீதிபதி Azura Alwi உத்தரவிட்டார்.
Perbicaraan kes rasuah Lim Guan Eng berkaitan projek jalan utama dan terowong dasar laut di Pulau Pinang akan disambung pada 24 Jun. Beliau didakwa meminta dan menerima suapan serta cuba memberi tanah negeri kepada pihak swasta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *