மலேசியாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்! - Khaled Nordin
- Thina S
- 05 Oct, 2024
ஒரு சில பாலஸ்தீனியர்களின் செயலுக்காக ஒட்டுமொத்தமாக
அனைவர் மீதும் குற்றம் சுமத்த கூடாது என பாதுகாப்பு அமைச்சர் Datuk
Seri Mohamed Khaled Nordin வலியுறுத்தினார். Wisma Transit கோலாலம்பூரில் பாலஸ்தீனியர்கள் இருவர் கூச்சலிட்டு சலசலப்பை ஏற்படுத்தும்படியானக்
காணொலிகள் சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து காவல் துறையினர் நிலைமையை உடனடியாகக்
கட்டுக்குள் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சர் Khaled Nordin தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களாக அவர்கள் வெளியே செல்லாததால் அவர்கள் வெளியில் செல்ல வேண்டும் எனக் கூச்சலிட்டதாகவும் அவர்களின் பாதுகாப்புக் காரணமாக மலேசியாவில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாததால் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் விளக்கமளித்தார். இது தொடர்பாகத் தவறான சில காணொலிகள் பகிரப்பட்டு வருவதாகவும் மலேசியாவில் சிகிச்சைக்காகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் நிலை பரிதாபத்திற்குரியது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Menteri Pertahanan Datuk Seri Mohamed Khaled Nordin menegaskan bahawa kejadian tersebut hanya melibatkan segelintir individu yang sedang berhadapan dengan tekanan, Rakyat Malaysia diminta agar tidak menghukum warga Palestin yang berlindung di negara ini,Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *