ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்தின் விலை 3 லட்சமா!

- Muthu Kumar
- 17 May, 2024
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் விதவிதமான மாம்பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமான மாம்பழ வகையின் ஒரு பெயர்தான் மியாசாகி.
இதன் மருத்துவ குணங்கள் காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மியாசாகி மாம்பழங்களின் சுவை தனித்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ 2.5 லட்சம் முதல் ரூ3 லட்ச வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஜப்பானில் இந்த பெயருக்கு "சூரியனின் முட்டை" என்று பொருள். இதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மியாசாகி மாம்பழங்களின் சுவை, மற்ற மாம்பழங்களை போல அல்லாமல் தனித்துவமாக இருக்கும்
இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் மியாசாகி மாம்பழங்களை விவசாயிகள் வளர்த்து சாதித்து காட்டியுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பியை அடுத்து சங்கரபுரா பகுதியில் வசித்து வரும் விவசாயி ஜோசப் லோபோ.இவர் புதுமையான முறையில் விவசாயம் செய்வது, நிலத்திற்கேற்ப மாற்று பயிர்களை விளைவிப்பது இவைகளில் கைதேர்ந்தவர். இவர் தன்னுடைய வீட்டு மாடியில் தோட்டம் வைத்துள்ளார். அதில், ஒயிட் ஜாவா பிளம், பிரேசிலியன் செரிஸ், தைவான் ஆரஞ்சுகள் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த பல்வேறு பழங்களை விளைவித்து வருகிறார். இந்த பட்டியலில் மியாசாகி மாம்பழங்களையும் வளர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதுபற்றி விவசாயி ஜோசப் லோபோ கூறுகையில், தற்போது நிறத்தில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் ஜப்பானில் விளையும் மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவில் விளைவிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செடியாக நட்டு வைத்தேன். கடந்த ஆண்டு தான் பூ பூத்தது. இந்த பூக்கள் அடுத்த சில மாதங்களில் பழமாக பழுத்திருக்கும். இந்த ஆண்டு ஏமாற்றம் அளித்தது. இந்த சூழலில் நடப்பாண்டு இதுவரை 7 பழங்கள் மட்டுமே விளைந்துள்ளன என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *