உரிமம் இல்லாத வெளிநாட்டு மருத்துவரும் 5 வெளிநாட்டுப் பெண்களும் கைது!

top-news

மே 22,

சட்டவிரோதமாக மலேசியாவில் மருத்துவக் கிளினிக் நடத்தி வந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் உள்ள MALEEQ கிளினிக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருத்துவர் என நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கிளினிக்கில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த 5 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட்ட பணிப்பெண்கள் மியன்மார், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 23 முதல் 57 வயதுக்குற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. முதற்கட்ட சோதனையில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த 5 வெளிநாட்டுப் பெண்களும் முறையான மருத்துவப் பணிச் செய்ய தகுதியற்றவர்கள் என்றும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட கிளினிக் 1 வருடத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டிருக்கும் பாக்கிஸ்தான் மருத்துவரான ஆடவரை விசாரித்து வருவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Seorang lelaki warga Pakistan yang menjalankan klinik haram di Kuala Lumpur ditahan bersama lima wanita asing yang bekerja tanpa kelayakan sah. Klinik tersebut telah beroperasi lebih setahun dan semua suspek didapati tinggal secara haram di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *