புதிய கல்விக் கொள்கையில் அரசியல் தலையீடு இருக்காது! – Fadhlina Sidek உறுதி!
.jpeg)
- Sangeetha K Loganathan
- 27 May, 2025
மே 27,
தொடக்கப் பள்ளி இடைநிலைப்பள்ளிகளுக்கானக் கல்வி கொள்கையை உறுதிப்படுத்துவதில் கல்வி அதிகாரிகளின் பங்களிப்பு மிகுந்து இருக்கும் என்றும் எந்தவோர் அரசியல் தலையீடும் இருக்காது என கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்தார். 2026 முதல் 2035 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வித் திட்டத்தை 2027 பள்ளிப் பாடத்திட்டத்தில் அமல்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் முக்கியத்துவம் அளித்து வருவதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
இடைநிலைப்பள்ளிகளுக்கானக் கட்டாயக் கல்வி கொள்கைக்கான வரைவுகளில் அனைத்து மாநிலக் கல்வி துறையின் பங்களிப்பும் கல்வியாளர்களின் பங்களிப்புமே இருக்கும் என்றும் மாநிலக் கல்விக் கொள்கைகள் விடுபடாமல் பாதுகாக்க மாநில அளவிலானக் கல்வி இலாகாவின் சிறப்புப் பணிப்படை அமைக்கப்பட்டிருப்பதையும் Fadhlina Sidek நினைவூட்டினார். தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அர்ப்பணிப்பு நிறைந்தவர்களாக இருப்பதை மட்டுமே தாம் உறுதிப்படுத்துவதாகவும் கல்விக் கொள்கைகளுக்கான வரைவில் தமது தலையீடும் இருக்காது என்பதை Fadhlina Sidek வெளிப்படையாக அறிவித்தார்.
KPM memberi fokus kepada pelan pendidikan baharu 2026-2035, Kurikulum Persekolahan 2027 dan Reformasi Sekolah. Usaha melanjutkan pendidikan wajib ke peringkat menengah turut digerakkan. Kadar keciciran SPM 2024 berjaya diturunkan hasil intervensi negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *