717 பள்ளிகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது! கல்வி அமைச்சர்!
- Sangeetha K Loganathan
- 13 Oct, 2024
மலேசியாவில் 1091 பள்ளிகளில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருப்பதாகவும் அவற்றில் 717 பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு இவ்வாரம் முழுமையானத் தோற்றம் பெறும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். தீபகற்ப மலேசியாவில் 352 திட்டங்களும், சபாவில் 339 திட்டங்களும் சரவாக்கில் 400 திட்டங்களையும் செயல்படுத்த மொத்தம் RM8.5 பில்லியன் செலவுகள் இருப்பதைக் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு திட்டமும் முழுமை பெற 6 மாதங்களிலிருந்து 36 மாதங்கள் வரையில் காலமெடுக்கும் என அவர் தெரிவித்தார். தற்போது 717 திட்டங்கள் முழுமை பெறும் நிலையில் மீதமுள்ள 183 திட்டங்களில் 176 திட்டங்கள் கட்டுமானத்திற்கான முந்தைய நிலையில் உள்ளதாகவும் 15 திட்டங்கள் மறு மதிப்பீட்டில் உள்ளதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK விளக்கமளித்தார். பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் குறித்து தீவிரமாகச் செயல்படும்படி பிரதமர் அன்வார் நினைவுருத்தியது குறிப்பிடத்தக்கது.
Sebanyak 717 daripada 1,091 projek naik taraf sekolah daif di Malaysia telah disiapkan, melibatkan kos RM8.5 bilion. Baki 183 projek sedang dibina, 176 prabina, dan 15 sedang dinilai semula. Anwar menegaskan penyelesaian masalah sekolah daif di seluruh Melaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *