ரஷ்யாவை எதிர்த்து தாக்க சொந்தமாக ராக்கெட்-ட்ரோனை உருவாக்கிய உக்ரைன்!

top-news
FREE WEBSITE AD

உக்ரைன் 700 கிலோமீட்டர் (430 மைல்கள்) தூரத்தை அடையக்கூடிய புதிய Rocket-Drone ஒன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.பெக்லோ (Peklo) என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன், உக்ரைனின் ராணுவ துறைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

பெக்லோ என்றால் உக்ரைனிய மொழியில் 'நரகம்' என்று பொருள்.உக்ரோபொரோன்ப்ரோம் (Ukroboronprom) எனப்படும் உக்ரைனின் அரசு ஆயுத தயாரிப்பு நிறுவனம் Peklo ரொக்கெட்-ட்ரோன் குறித்து கூறியுள்ளது.சுமார் ஒரு மீட்டர் நீளமான இந்த ட்ரோன் 700 கிமீ வேகத்தில் பாயக்கூடிய திறன் கொண்டது.

சிறிய இறக்கைகள் மற்றும் இரட்டை வால் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், குறைந்த உயரத்தில் பறந்து இலக்கை துல்லியமாக அடையும் திறன் கொண்ட ஒரு வகை "க்ரூஸ் ஏவுகணை" எனக் கருதப்படுகிறது.ரஷ்யாவுக்கு பயன்படக்கூடிய தகவல்களை மறைக்கும் நோக்கத்துடன் இதன் செயல்திறன் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என உக்ரைனின் ராணுவ உற்பத்தி அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைன், இதற்கு முன்பும் 1,000 கிமீ தூரத்தில் உள்ள ரஷ்ய இலக்குகளை தாக்கும் திறனுடன் குண்டுகளால் நிரம்பிய ட்ரோன்களை அனுப்பியுள்ளது.மேற்கு நாடுகளின் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியாவில் உள்ள முக்கிய இலக்குகளைத் தாக்க உக்ரைன் நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது.தற்போது பெக்லோ போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *