இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த வெ க தலைவர் விஜய்!

- Muthu Kumar
- 08 Mar, 2025
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், "சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றார். மாலை 6:24 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் விஜய் வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தலையில் தொப்பியுடன் வந்தார்.பிறகு நோன்பு கஞ்சியை குடித்து இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பை திறந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற விஜய் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கு பேசிய தவெக தலைவர் விஜய், "நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி இங்கு இருக்கும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும், என் அன்பான அழைப்பை ஏற்று, அனைவரும் வந்து பங்கேற்றதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று பேசினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *