PKR தேர்தல் - 32,030 பேர் வாக்களிக்கிறார்கள்! – ஜலிஹா முஸ்தபா

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 22: 2025 - 2028 பதவிக்காலத்திற்கான 75 நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை வெள்ளிக்கிழமை  மொத்தம் 32,030 பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள் என்று பிகேஆர் மத்திய தேர்தல் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

9,029 பிரதிநிதிகள் நேரடியாக வாக்களிப்பார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் இணையம் வழி வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் கட்சித் தேர்தல்களில் 75 பதவிகளுக்கு 251 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக டாக்டர் ஜலிஹா கூறினார்.

ஜொகூரில் இரண்டு வாக்களிப்பு மையங்கள் உள்ளன. மேலும் சபா மற்றும் சரவாக்கிலும் இரண்டு வாக்களிப்பு மையங்கள் உள்ளன என்று இன்று நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போது அவர் கூறினார்.

வேட்பாளர்களில் மத்திய தலைமைத்துவத்துக்கு 104 வேட்பாளர்களும், இளைஞர் பிரிவுக்கு 85 வேட்பாளர்களும், மகளிர் பிரிவுக்கு 62 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக டாக்டர் ஜலிஹா கூறினார்.

வேட்பாளர்களின் பிரச்சாரம் குறித்து கேள்விக்கு ​​வாக்களிப்பு மையங்களில் சில பிரச்சார பதாகைகளை அகற்றுவது உட்பட எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்!

Sebanyak 32,030 perwakilan PKR akan mengundi esok bagi memilih 75 pemimpin bagi penggal 2025–2028. Undian dijalankan secara fizikal dan dalam talian dengan 251 calon bertanding. PKR turut keluarkan amaran berkaitan bahan kempen di pusat pengundian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *