உணவகத்திற்கு நாயுடன் வந்த ஆடவர்! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
முஸலீம் உணவகத்திற்குத் தனது செல்ல பிராணியான நாயுடன் அமர்ந்திருந்த ஆடவரின் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Segamat மாவட்டக் காவல் ஆணையர் AHMAD ZAMRY MARINSAH தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த மே 11 நண்பகல் 12 மணியளவில் நிகழந்ததாக அவர் தெரிவித்தார்.
SEGAMAT BARUவில் அமைந்துள்ள NASI KANDAR உணவகத்திற்கு நாயுடன் வந்த ஆடவர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படியும் சம்மந்தப்பட்ட உணவகத்தின் பணியாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடவரின் நாய் அமர்ந்திருந்த நாற்காலியைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு அப்புறப்படுத்தியதாகவும் முதல் முறையாக அந்நபரைக் காண்பதாகவும் விளக்கமளித்துள்ளதாக Segamat மாவட்டக் காவல் ஆணையர் AHMAD ZAMRY MARINSAH தெரிவித்தார். HALAL உணவகங்களில் இதுமாதிரியானச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு வலியுறுத்தியது.
Polis sedang mengesan seorang lelaki yang membawa anjing peliharaannya ke sebuah restoran nasi kandar di Segamat Baru pada 11 Mei lalu. Tindakan itu tular dan disiasat kerana melibatkan sensitiviti di premis makanan halal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *