RM 2 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஆடவர் கைது!

top-news

மே 16,

பினாங்கு BUTTERWORTH பகுதியில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருளுடன் உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளாத பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK HAMZAH AHMAD தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய 41 வயது ஆடவர் வாகனம் நிறுத்துமிடத்தில் போதைப்பொருள் பொட்டலங்களுடன் நேற்று காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் வீட்டிலிருந்து RM 2.1 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக DATUK HAMZAH AHMAD தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட அடுக்குமாடி வீட்டைப் போதைப்பொருளைப் பதுக்கி வைப்பதற்காகவும் வெளிமாநிலங்களுக்குப் போதைப்பொருளை அனுப்பும் முன்னர் சோதனை செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3,920 GRAM MDMA போதைப்பொருள் 384 கிராம் KETAMIN வகை போதைப்பொருள், 100 க்கும் மேற்பட்ட ERIMIN, EKSTASI வகை போதை மாத்திரைகள், RM 40,000 மதிப்பிலானத் தங்க நகைகள் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் MERCEDES வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக DATUK HAMZAH AHMAD தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 41 வயது உள்ளூர் ஆடவர் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan berusia 41 tahun ditahan bersama dadah bernilai RM2.1 juta dalam serbuan di Butterworth, Pulau Pinang. Polis turut merampas pelbagai jenis dadah, barang kemas dan sebuah kereta mewah, menurut Ketua Polis Negeri Datuk Hamzah Ahmad.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *