அம்பாங் கோயிலை உடைத்த இளைஞர் கைது! ஆவேசம் வேண்டாம்! காவல்துறை நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
அம்பாங்கில் உள்ள ஒரு கோயிலை ஆடவர் ஒருவர் இரும்பு கம்பிகளால் சேதப்படுதியது தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்ட 33 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் கோயில் தரப்பினர் அமைதி காக்கும்படியும் Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார். இது தொடர்பானப் புகைப்படங்களும் தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளையும் பரப்புவதைத் தவிர்க்கும்படி Mohd Azam Ismail கேட்டுக்கொண்டார். கோயிலை சேதப்படுத்திய 33 வயது அடவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார்
இச்சம்பவம் இன்று காலை 8.29 மணிக்கு Taman Sri Ampang பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நிகழ்ந்ததாகவும் 34 வயதுள்ள கோயில் செயலாளரிடமிருந்து புகார் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து கோயிலைச் சேதப்படுத்திய 33 வயது இந்தோனேசிய ஆடவரைக் கைது செய்ததாகவும் Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் methamphetamine , amphetamine வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் இது இன மத வெறியுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல என்றும் இது தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளையோ உள்ளடக்கங்களையோ பரப்ப வேண்டாம் என Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail வலியுறுத்தினார்.
Seorang lelaki warga Indonesia berusia 33 tahun ditahan kerana merosakkan sebuah kuil di Ampang menggunakan batang besi. Polis menegaskan insiden itu bukan bermotifkan perkauman atau agama, dan menasihatkan orang ramai agar tidak menyebar kandungan palsu berkaitannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *