போதைப்பொருளுடன் உள்ளூர் ஆடவரும் வெளிநாட்டுப் பெண்ணும் கைது!

top-news

மே 20,

வடக்கு மலேசியாவின் எல்லை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரும் தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கிளாந்தான் மாநில எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவின் சிறப்புப் படையான PGA கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.20 மணிக்கு ரோந்து பணியில் இருந்த அதிகாரிகள் RANTAU பகுதியில் உள்ள படகுகள் நிறுத்தி வைக்கும் முனையத்தில் சந்தேகத்திற்குரிய ஆடவர் படகிலிருந்து பெட்டிகளைத் தனது வாகனத்தில் மாற்றி வைப்பதைக் கண்டு சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது பெட்டிகளிலிருந்து 55.899 கிலோ எடையிலான Ganja வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் இருந்த நிலையில் அவரையும் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண் Methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் போதைப்பொருள் கடத்தியதாக உள்ளூர் ஆடவரையும் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan dan wanita warga Thailand ditahan oleh PGA di Rantau, Kelantan kerana terlibat dalam penyeludupan dadah. Sebanyak 55.899 kg ganja dirampas, dan wanita berkenaan disahkan positif methamphetamine dalam ujian saringan awal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *