தேர்தல் பிரச்சாரங்களில் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண்!

top-news
FREE WEBSITE AD

ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சினிமா பிரபலங்களான அல்லு அர்ஜுனும், ராம் சரணும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு சேகரிப்பின் கடைசி நாளான இன்று, நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்துள்ளது அம்மாநிலத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன், அவரது மனைவியுடன் நந்தியால் தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவிசந்திரன் கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். இவரை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய அவர், "ஷில்பா ரவி எனக்கு மிகவும் நல்ல நண்பர். அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு எங்களுக்குள் உள்ளது. எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன், நாங்கள் இருவரும் பத்து நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசுவோம். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் சந்திக்கிறோம். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார்.

முதல்முறை அவர் போட்டியிடும்போது அவரை ஆதரித்து ட்வீட் செய்திருந்தேன். ஆனால் இப்போது ட்வீட் போட்டால் மட்டும் போதாது என்று நானே வீட்டுக்கு வந்து அவரை ஆதரிக்க வேண்டுமென நினைத்தேன். அதனால் தான் இங்கே வந்தேன்" என கூறினார்.

மறுபுறம், பவன் கல்யானை சந்தித்து நடிகர் ராம் சரண் ஆதரவு தெரிவித்தார். அல்லு அர்ஜுன் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறுகையில் அல்லு அர்ஜுன் அங்கு சென்றது அவரது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தியும், ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *