எக்ஸ் தளத்தை பல கோடிக்கு விற்பனை செய்த எலான் மஸ்க்!

- Muthu Kumar
- 30 Mar, 2025
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது எக்ஸ் (Elon Musk) நிறுவனத்தை பல கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.இது குறித்து அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தை வாங்கிய நிலையில், தற்போது தனது மற்றொரு நிறுவனமான எக்ஸ் ஏஐ (xAI) நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்துள்ளார்.
உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற மாபெரும் நிறுவனங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் (Twitter) தளத்தை வாங்கிய மஸ்க், அதற்கு எக்ஸ் என பெயரிட்டார். பெயரை மாற்றியது மட்டுமன்றி, பயனர்களுக்கான விதி, பயன்படுத்தும் முறை உள்ளிட்டவற்றில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார்.
குறிப்பாக ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் பெருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியது இவை அனைத்தும் பெரும் பேசுபொருளாக மாறியது. இருப்பினும் எதை குறித்தும் கவலை கொள்ளாத மஸ்க், தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், எக்ஸ் தளத்தை பல கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், எக்ஸ் நிறுவனம் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் அனைத்து பங்குச் சந்தையில் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். xAI-ன் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், X-ன் மதிப்பு 33 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் மற்றும் திறமையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள எலான் மஸ்க், இது மகத்தான ஆற்றலை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *