அமேசான் மழைக் காட்டு பழங்குடி கிராமத்திற்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவை வழங்கிய எலான் மஸ்க்!
- Muthu Kumar
- 06 Jun, 2024
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க்.
சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதே இந்த ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் குறிக்கோள்.. பல பகுதிகளுக்கு இதுபோல ஸ்டார்லிங்க் இணையச் சேவையை வழங்கி இருக்கிறது
அப்படி தான் தென் அமெரிக்காவின் அடர்ந்த அமேசான் மழைக் காடுகளில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவையை வழங்கி இருக்கிறது. 2000 பேரை மட்டுமே கொண்ட மாருபோஸ் என்ற பழங்குடியினர், தங்களின் தனி மொழியைத் தான் பேசி வருகிறார்கள். அவர்கள் கலாச்சாரமும் பழமையானது. இவர்கள் முதல்முறையாக ஸ்டார்லிங்க் மூலமாக இணையச் சேவையைப் பெற்றுள்ளனர்.
ஆனால், இந்த இணைய வசதி யாருமே எதிர்பார்க்காத ஒரு தாக்கத்தை அங்கு ஏற்படுத்தி இருக்கிறது. இதை அங்குச் சென்ற சர்வதேச செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசிலில் சேவைகளைத் தொடங்கிய ஸ்டார்லிங்க் அங்கு அமேசான் காடுகளில் வாழும் கிராமங்களுக்கும் இணையச் சேவை வழங்கி இருக்கிறது.
இது தொடக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தாலும் கூட இப்போது நேர்மாறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகப் புலம்புகிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான சாய்னாமா மருபோ .. அவர் கூறுகையில், "முதலில் எங்களுக்கு இணைய சேவை கிடைத்த போது அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் தொலை தூரத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டன. இணைய வசதி இளைஞர்களைச் சோம்பேறியாக மாற்றிவிட்டது" என்கிறார்.
இது அவர்களின் கலாச்சாரத்தையும் மொத்தமாக மாற்றிப் போட்டுவிட்டதாம்.. இங்குள்ள இளைஞர்கள் இப்போது தங்கள் மொபைல்களுக்கு அடிமையாகிவிட்டனர்.. 24 மணி நேரமும் கைதொலைபேசியுடன் தான் இருக்கிறார்களாம்.. குறிப்பாக ஆபாசப் படங்களுக்கு அவர்கள் அடிமையாகவிட்டதாக அந்த கிராமத்தில் உள்ள மூத்த குடிமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம் ஆபாசப் படங்களால் கெடுதல்கள் மட்டுமே நடந்துள்ளது என்று இல்லை. அந்த கிராமத்தில் பல குழந்தைகள் இணையம் வழியாகப் படிக்கத் தொடங்கியுள்ளனர். பாம்புக் கடி போன்ற ஆபத்தான சூழல்களில் அவர்களால் உடனடியாக மருத்துவர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. இதுபோல சிலர் ஏற்கனவே காப்பாற்றப்பட்டும் இருக்கிறார்களாம். மேலும், அங்குள்ள கிராம மக்களால் பல புதுப்புது விஷயங்களை கற்கவும் முடிகிறதாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *