சாலையோரக் கடையை மோதிய லாரி!

- Sangeetha K Loganathan
- 22 May, 2025
மே 22,
மரக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடையையும் 2 வாகனங்களை பள்ளி சுவற்றையும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. பிற்பகல் 2 மணியளவில் Hulu Besut சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad தெரிவித்தார். இந்த விபத்தில் 2 வாகனங்களும் சாலையோரத்தில் இருந்த ஒரு கடையும் சோதமடைந்த நிலையில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad விளக்கமளித்தார்.
ஓட்டுநர் ரத்த அழுத்தத்தின் காரணமாக லாரி ஓட்டுநர் மயங்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 48 வயது லாரி ஓட்டுநர் மயங்கிய நிலையில் லாரியிலிருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் மீட்புப் படையினர் உதவியுடன் Besut அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட 48 வயது லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah lori yang membawa kayu hilang kawalan akibat pemandunya pengsan lalu merempuh sebuah kedai tepi jalan, dua kenderaan dan tembok sekolah di Hulu Besut. Tiada kematian dilaporkan dan pemandu kini dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *