விபத்துக்குள்ளான லாரி! தீயில் கருகி ஓட்டுநர் பலி!

- Sangeetha K Loganathan
- 24 May, 2025
மே 24,
கட்டுப்பாட்டை இழந்த 30 டன் லாரி விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட தீயில் லாரி ஓட்டுநர் லாரியிலிருந்து வெளியேற முடியாமல் லாரிலேயே சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.55 மணியளவில் விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததும் விபத்து ஏற்பட்ட Jalan Kidurong சாலைக்கு தீயணைப்பு மீட்புப் படையினருடன் விரைந்ததாக BINTULU மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான லாரி தீயினால் சூழப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர் 59 வயது Mugai Juming என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் BINTULU மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார். காலை 11.55 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக பிந்துலு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் BINTULU மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார்.
Seorang pemandu lori berusia 59 tahun maut selepas lori dipandunya terbabas dan terbakar di Jalan Kidurong, Bintulu. Mangsa gagal menyelamatkan diri dan rentung di tempat kejadian. Mayat dihantar ke hospital untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *