பாரிசானை நம்பும் மக்கள்! மகாதீர் பரிதாபம்!

- Sangeetha K Loganathan
- 02 May, 2025
மே 2,
இன்னமும் தேர்தல்களில் பாரிசான் நேசனலை மக்கள் நம்புவது வருத்துமளிப்பதாக முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad வருத்தம் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றும் ஒரு கட்சியாக Barisan Nasional இருப்பதைப் பலரும் தெரிவித்தும் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் தேர்தல்களில் பாரிசானுக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதைத் தம்மால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என மகாதீர் தெரிவித்துள்ளார்.
பாரிசானை மக்கள் நம்புவதால் எனக்கு மிகுந்த வருத்தமும் சோகமும் ஏற்படுவதாகவும் அதே நேரத்தில் மக்கள் மீது கோபமாக இருப்பதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார். வெளிப்படையாகப் பாரிசான் நேஷ்னல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியும் வருகிறது. ஆனாலும் மக்கள் பாரிசானுக்கு வாக்களிப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad வருத்தம் தெரிவித்துள்ளார்.
Tun Dr Mahathir Mohamad meluahkan rasa kecewa terhadap rakyat yang terus mempercayai Barisan Nasional dalam pilihan raya walaupun parti itu gagal menunaikan janji dan terbabit dengan kes rasuah, menyebabkan beliau sedih dan marah terhadap keputusan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *