அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் நஜீப்பின் பேராசை! – மகாதீர்!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
இப்போது அம்னோ அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கு நஜீப்பின் பேராசை மட்டுமே முக்கிய காரணம் என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohamad வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இனம், தேசம், சமயம் என்பதை முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட அம்னோ இப்போது இல்லை என்றும் கீழ்த்தரமான அரசியலும் பணத்திற்கும் வெற்றுப் புகழ்ச்சிக்கும் அம்னோ வீழ்ந்ததாக Tun Mahathir Mohamad தெரிவித்தார். அம்னோவின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் நஜீப் என Tun Mahathir Mohamad தெரிவித்தார்.
நஜீப் பண அரசியலை அம்னோ முழுவதும் அறிமுகப்படுத்தினார். நஜீப் போன்றவர்களால் அம்னோ மெல்ல மெல்ல சரிவை நோக்கி செல்வதாகத் தாம் முன்னமே எச்சரித்ததாகவும் ஆனால் அம்னோ தனது எச்சரிக்கையைக் கேட்காமல் நஜீப் தனித்து செயலல்பட்டதால் அம்னோ அதன் உண்மையான நோக்கத்தை விட்டு விலகி இப்போது வீழ்ச்சியில் இருப்பதாகவும் Tun Mahathir Mohamad தெரிவித்தார். அம்னோ மீண்டும் பழைய மாதிரி எழுச்சியுடன் அரசியல் செய்ய வாய்ப்பே இல்லை என மகாதீர் தெரிவித்தார்.
Tun Mahathir menuduh Datuk Seri Najib Razak sebagai punca utama kejatuhan UMNO akibat sifat tamak dan pengenalan politik wang. Beliau menyatakan UMNO telah menyimpang dari asas perjuangannya dan kini tiada harapan untuk bangkit semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *