மன்னிப்புக் கேள்! இல்லையேல் வழக்கு! – மகாதீர் காட்டம்!

top-news

ஏப்ரல் 18,


முன்னாள் பிரதமர் Tun Dr. Mahathir Mohamad அம்னோவின் சொத்துகளைத் திருடியதாகவும் அம்னோ மூலமாக அவர் சம்பாதித்த சொத்துகளைத் திருப்பிக் கொடுக்கும்படியும் கருத்து தெரிவித்திருந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Puad Zarkashi பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் மகாதீர் இன்று வலியுறுத்தினார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரான Datuk Puad Zarkashi தம்மை இழிவுப்படுத்தும் வகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டு மீண்டும் அந்த அறிக்கையை அழித்து விட்டதாகவும் Datuk Puad Zarkashi வெளியிட்ட அறிக்கையின் நகல் தம்மிடம் இருப்பதாகவும் Datuk Puad Zarkashi மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடுப்பேன் என முன்னாள் பிரதமர் Tun Dr. Mahathir Mohamad தெரிவித்தார். 

முதிர்ந்த அரசியல் தலைவராக இருக்கும் தன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் நபர்களுக்கு இது பாடமாக அமையும் என்றும் நான் திருடினேன் என்றால் என்னோடு இருந்தவர்கள் மட்டும் எப்படி புண்ணியவான்களாக இருக்க முடியும் என மகாதீர் கேள்வி எழுப்பினார். மன்னிப்புக் கேட்காமல் அறிக்கையை மட்டும் நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அம்னோ தலைமையகத்தில் Datuk Puad Zarkashi வெளிப்படையாகச் செய்தியாளர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மகாதீர் வலியுறுத்தினார்.

Tun Dr. Mahathir Mohamad menuntut Datuk Puad Zarkashi memohon maaf secara terbuka kerana menuduh beliau mencuri harta UMNO. Jika tiada permohonan maaf, Mahathir menyatakan beliau akan mengambil tindakan undang-undang terhadap Puad.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *