மடானி இஸ்லாத்திற்கு எதிரான அரசா? மறுத்தார் அன்வார்!

top-news

தன்னை இஸ்லாத்திற்கு எதிரானவர் எனும்படியானக் கருத்துகளை விதைக்கும் போக்கை எதிர்க்கட்சியினர்கள் கைவிடவேண்டும் என பிரதமர் அன்வார் வலியுறுத்தினார். இஸ்லாம் மதத்தைக் கூட்டாட்சி மதத்திலிருந்து மாற்றுவதற்கானச் சூழ்ச்சிகளை மடானி அரசு முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதில் எந்தவோர் உண்மையும் இல்லை என பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சியினர் நாளுக்கு நாள் அசிங்கமான முன்னெடுப்புகளை எடுப்பது வருத்தத்திற்குரியது என அன்வார் தெரிவித்தார். மலேசியாவில் பூமிப்புத்ரா, சுல்தான், மாமன்னர் போன்ற விவகாரங்களில் மடானி அரசு கண்ணும் கருத்துமாகச் செயல்படுவதாகவும் அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஆட்சியை நடத்துவதாகவும் அன்வார் நம்பிக்கை அளித்தார்.

அரசியல் கட்சியாகத் தாம் பல்லினக் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் மலேசியாவின் கொள்கைகளையும் அதன் சரீரத்தையும் அனைத்து இனத்தவரும் மதித்து செயலாற்றும் கட்சியாக இருந்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினர்களின் வெறுப்பு மத அரசியல் போக்கு, மக்களிடையே பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் உண்டாக்கும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim menegaskan kerajaan tidak pernah berbincang untuk menukar status agama Islam sebagai agama Persekutuan, sambil menyifatkan tuduhan pembangkang sebagai pemalsuan fakta yang berpotensi mencetuskan kebencian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *