ஆற்றில் மிதந்த ஆடவரின் சடலம்!

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
ஆடவரின் சடலம் ஆற்றில் மிதக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். சமூக வலைத்தலத்தில் பரவிய காணொலியை மேலும் பரப்ப வேண்டாம் என Mohd Akmalrizal Radzi வலியுறுத்தினார்.
Sungai Langat ஆற்றில் மிதந்த சடலம் ஆணின் சடலம் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இடது கையில் பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும் மற்ற அடையாளங்கள் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உடலில் எந்தவொரு காயமும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் இது தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் கோலா லங்காட் மாவட்ட காவல் தலைமையகத்தை 03-3187222 எனும் எண்களின் மூலமாகத் தொடர்புக் கொள்ளும்படியும் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
Mayat seorang lelaki ditemui terapung di Sungai Langat dan disahkan tiada kesan kecederaan. Polis sedang menyiasat dan menyeru orang ramai agar tidak menyebarkan video kejadian yang tular di media sosial serta tampil memberi maklumat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *