ஒற்றுமை கூட்டணியில் MCA நீடிக்குமா? ம.சீ.ச விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 27 May, 2025
மே 27,
பாரிசான் பக்கத்தான் இணைந்து அமைத்திருக்கும் ஒற்றுமை கூட்டணியுடன் ம.சீ.ச பல்வேறு முரண்கள் கொண்டிருந்தாலும் பாரிசானிலிந்து MCA ஒரு நாளும் வெளியேறாது என ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong உறுதியளித்தார். ம.சீ.ச அம்னோவோடு கருத்து முரணில் இருப்பதாகவும் பாரிசானோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பாரிசானிலிருந்து வெளியேறுவதாக வெளிவரும் செய்திகளில் எந்தவோர் உண்மையும் இல்லை என Datuk Seri Dr Wee Ka Siong தெரிவித்தார்.
முன்னதாகப் பகாங் மாநில ம.சீ.ச கட்சியின் கூட்டத்தில் ம.சீ.ச பாரிசானின் மீது கடுமையானக் கோபத்தில் இருப்பதாகவும் எந்தநேரத்திலும் ம.சீ.ச வெளியேறலாம் எனும்படியானக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அது பாரிசானுக்கு எதிரானக் கலந்துரையாடல் இல்லை, அது ஒற்றுமைக் கூட்டணிக்கு எதிராகப் பேசப்பட்டது என Datuk Seri Dr Wee Ka Siong வலியுறுத்தினார்.
MCA menegaskan tidak akan keluar daripada Barisan Nasional meskipun terdapat perbezaan pendapat, kata Presiden Datuk Seri Dr Wee Ka Siong. Beliau menafikan dakwaan wujud perbincangan untuk meninggalkan BN dan menjelaskan isu hanya berkaitan Unity Government.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *