32,436 போலி வலைத்தளங்கள் முடக்கம்! RM800 மில்லியன் இழப்பு! – MCMC

top-news

மே 18,

போலி முதலீடுகள் கொண்டு செயல்பட்டு வந்த 32,436 சமூகவலைத்தளப் பதிவுகளை தொலைதொடர்பு பாதுகாப்பு ஆணையமான MCMC முழுமையாக நீக்கியிருப்பதாகத் தொடர்புத் துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட 32,436 சமூக வலைத்தளப்பதிவுகளை நீக்கியதுடன் சம்மந்தப்பட்ட கணக்குகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக Teo Nie Ching தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் தொலைதொடர்பு பாதுகாப்பு ஆணையமான MCMC 63,652 போலியானச் சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கியிருந்ததாகத் தற்போது பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் 4 மாதங்களில் போலியான விளம்பரங்களை உள்ளடக்கிய பதிவுகளையும் அதன் வலைத்தளங்களையும் முடக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதுவரையில் முடக்கப்பட்ட போலி விளம்பர உள்ளடக்கங்களால் சுமார் RM800 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதையும் அவர் நினைவுருத்தினார்.

MCMC telah menutup 32,436 akaun media sosial palsu berkaitan penipuan pelaburan antara Januari hingga April, kata Timbalan Menteri Komunikasi Teo Nie Ching. Langkah ini susulan kerugian sebanyak RM800 juta akibat kandungan dan laman palsu tahun ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *