இனங்களுக்கிடையிலானச் சமத்துவத்தை விளையாட்டுகள் மேம்படுத்துகிறது! – YB SARASWATHY
- Thina S
- 18 Aug, 2024
விளையாட்டு நடவடிக்கைகள் இந்நாட்டில்
உள்ள பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமைத்துவத்தை வளர்ப்பதாக தேசிய ஒற்றுமைத் துறை
துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இன்று கோலாலம்பூர், சிலாங்கூர் சீன வர்த்தகத்தொழிற்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்த Merdeka Foodie Run தொடக்கி வைத்து அவர் பேசினார்.இந்நாட்டில் பல இனங்களுக்கிடையே ஒற்றுமை துவத்தை வலுப்பெறு செய்ய இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடுவராக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் மலேசியர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது மகிழ்ச்சியை தருவதாக அவர் தெரிவித்தார். இந்நாட்டிலுள்ள பல இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்த விளையாட்டுப் போட்டிகள் பாலமாக இருந்து வருவதாக அவர் சொன்னார். நம்மிடையே அரசியல், மதம் மற்றும் சமய வேறுபாடுகள் இருந்து வந்தாலும், நமது தேசிய குழுவை ஆதரிக்கும் போது இந்த வேறுபாடுகள் கலைந்து விடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நமது தேசிய குழு ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும்போது நம்மிடையே இந்த ஒற்றுமையை காண முடிகிறது என்றார் அவர். மலேசியாவின் 67 ஆவது விடுதலை நாளை முன்னிட்டு நடைபெறும் இந்த ஓட்டத்தில் சுமார் 3,000 பேர் கலந்து கொள்வது பெருமையை தருவதாக அவர் சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *