பூமியை நோக்கி வரும் விண்கல்! பூமிக்கு ஆபத்தா?

top-news
FREE WEBSITE AD


கோள்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்து ஆண்டுக்கு இருமுறை நாசா செய்முறை பயிற்சியை மேற்கொள்ளும். அந்தவகையில், 5வது ஆண்டாக கடந்த ஏப்ரல் மாதம் அந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் சுருக்கத்தை மேரிலாந்தின் லெளரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20 ஆம் தேதி, நாசா வெளியிட்டது.

இதில் நாசாவைத் தவிர பல்வேறு அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் துறை ரீதியான சர்வதேச கூட்டுப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்முறை பயிற்சியில், பூமியைத் தாக்குவதற்கான அபாயம் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனால், அபாயகரமான விண்கல்லை எதிர்கொள்ளும் பூமியின் திறன் குறித்து அறியப்பட்டதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரி லின்ட்லி ஜான்சன் கூறுகையில், இந்த ஆய்வு ஆரம்ப நிலைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சவாலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ள அனுமதித்ததாகக் குறிப்பிட்டார்.

நாசா வெளியிட்டுள்ள பயிற்சியின் சுருக்கத்தில், ஆரம்பகட்ட கணிப்பின்படி, தோராயமாக அடுத்த 14 ஆண்டுகளில் பூமியின் மீது விண்கல் தாக்கும் அபாயம் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

துல்லியமாக கணக்கிட்டால், 2038 ஜூலை 12 ஆம் தேதி தாக்குதற்கு 72% வாய்ப்புள்ளது. (இன்னும் 14.25 ஆண்டுகள் உள்ளது)

எனினும் எரிகல்லின் அளவு கலவை மற்றும் அதன் நீண்ட காலப் பாதையை துல்லியமாக தீர்மானிக்க இந்த ஆரம்பநிலைத் தரவுகள் போதுமானதாக இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியின் வெளிப்பாடாக விண்கல்லை எதிர்கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப பலம், உலகளாவிய ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேலாண்மை செய்யும் திறன் குறைவாக உள்ளதாக நாசா குறிப்பிடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *