போருக்கு மத்தியில், தனது தங்கையை மருத்துவ வசதிக்காக தூக்கிச் செல்லும் அக்கா!
- Muthu Kumar
- 23 Oct, 2024
காசாவில் போருக்கு மத்தியில், காயமடைந்த தனது தங்கையை மருத்துவ வசதிக்காக தெருக்களில் தூக்கிச் செல்லும் சிறுமியின் நெஞ்சை பதற வைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் சிறுமி தனது தங்கையை தோலில் சுமந்து கொண்டு சென்றிருக்கிறார். அவரிடம் எங்கே செல்கிறாய் என ஒருவர் கேட்க.. எனது தங்கையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்றார். மேலும், அந்த காணொளியில் என்னால் நடக்க முடியவில்லை என சிறுமி கூறுவது காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது.
பின்னர் காணொளி எடுத்த நபர் இரண்டு சிறுமிகளையும் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கார் பயணத்தின் போது, அந்த நபர் சிறுமியிடம், 'உன் தங்கையை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என கேட்க.. அந்த சிறுமி தலையசைத்தார். மருத்துவ மனையை அடைந்ததும், அந்த சிறுமி தனது தங்கையை மீண்டும் தோலில் சுமந்து கொண்டு மருத்துவமனை உள்ளே சென்றார். இந்த காணொளி இணையத்தில் வைரலானது.
இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும்.. என்ற தலைப்புடன் X இல் காணொளி பகிரப்பட்டது. காசாவில் நடந்த போரில் 40,000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி நூற்றுக்கணக்கான குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கள் இளைய உடன்பிறப்புகளை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய நகரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து போர் நடந்தது. இந்த தாக்குதல் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தால் ஒரு மிருகத்தனமான எதிர்த் தாக்குதலை ஈர்த்தது, அது இடைவிடாமல் காசா பகுதியில் குண்டுவீசித் தாக்கியது. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, நடந்து வரும் மோதலில் சுமார் 17,000 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *