60 Million மதிப்பிலான மித்ராவின் திட்டங்கள்! – YB Prabakaran

top-news
FREE WEBSITE AD

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான  MITRA 2024 ஆம் ஆண்டுக்கான 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக 60 மில்லியனுக்கான நிதி ஒதுக்கீடுகளை முடிவு செய்துள்ளதாக MITRA சிறப்புப் பணிக்குழுத் தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான YB Prabakaran Parameswaran தெரிவித்தார்.

 

திட்டம் : 1 - இளம் தொழில் முனைவோருக்கானத் திட்டத்தில் 654 இளைஞர்களுக்குக் கனரக ஓட்டுநர் உரிமத்திற்காக 1.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் நேரடியாக ஓட்டுநர் உரிமத்திற்கான JPJ பயிற்சி மையங்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

திட்டம் : 2 - 186 தனியார் பாலர்பள்ளிகளைச் சேர்ந்த 4,545 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 4 முதல் 6 வயது மாணவர்கள் B40 பிரிவினராக இருப்பதை உறுதிச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

திட்டம் : 3 - கூழ்மப்பிரிப்பு (Dialysis) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 800 நோயாளிகளுக்கு 8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மித்ராவின் ஆய்வின் அடிப்படையில் 1,153 நோயாளிகள் நிதி வேண்டிக் கோரியுள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 800 நோயாளிகளுக்கு மட்டும் மித்ராவின் 8மில்லியன் நிதி பகிர்ந்தளிக்கப்படுவதாக அவர்  தெரிவித்தார்.

 

திட்டம் : 4 - பேரிடர் நிவாரணம், குடும்ப உதவிகள்,  தங்குமிடன் வசதிகள், சுகாதார முதலுதவித் திட்டங்கள், இறுதிச் சடங்குகள் மேலாண்மையகம், மகப்பேறு உதவிகள் என அடிப்படை உதவிகள் வேண்டிய 14,330 பேருக்கு 15.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் மாதம் முதல் இவ்வுதவிகளை அவர்கள் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திட்டம் : 5 - உயர்கல்விக் கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்காக 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 12,400 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறுவர் என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டுப் பயிலும் மாணவர்களுக்காக BSN வங்கியயின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் எதிர்வரும் அக்டோபர் முதல் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

 

இத்திட்டங்களை அடுத்து TveT தொழில்கல்வியை மேற்கொள்ள 5000 இந்திய இளைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இயக்கங்களுடன் இணைந்து மித்ராவின் திட்டங்களைச் செயல்படுத்தும் முறைகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என MITRA சிறப்புப் பணிக்குழுத் தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான YB Prabakaran Parameswaran தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *