குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது; குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் வரவேற்பு!
- Shan Siva
- 22 Aug, 2024
புத்ராஜெயா, ஆகஸ்ட் 22: குடிநுழைவுத்துறை KLIA இல் தனது ஐந்து அதிகாரிகளை கைது செய்ததை வரவேற்றுள்ளது.
மேலும், மேல் விசாரணைக்காக இந்த வழக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யிடம் விட்டுவிடுவதாக அது தெரிவித்துள்ளது.
தனது துறையும் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் முழுமையாக ஒத்துழைக்கும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
நாட்டின் நுழைவுப் புள்ளிகளிலோ அல்லது நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு அலுவலகங்களிலோ அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் போன்ற நேர்மை மீறல்களில் ஈடுபடும் அதன் எந்த அதிகாரிகளையும் குடிநுழைவுத்துறை பாதுகாக்காது என்று அவர் கூறினார்.
அதிகாரிகளின் தவறு நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அவர் எச்சரித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *