மசூதியில் அத்துமீறி புகுந்து காவிக் கொடி ஏற்றிய கும்பல்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, தர்காவின் மேல் இருந்த பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

அந்த காணொளியில், கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைகிறது. அங்குள்ள பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுகின்றனர். மற்ற சிலர் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்ட போது கைதட்டினர்.

அவர்கள் அவ்வாறு தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நேற்று முன் தினம் மார்ச் 26 அன்று நடந்துள்ளது.

அத்துடன், அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *