நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உணர்ச்சிகர கருத்துகளா?... போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஆகஸ்ட் 8: நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல்வாதி ஒருவர் உணர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படும் வீடியோ குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 4A, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

 இவ்விவகாரம் குறித்து ஊகங்கள் வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

போலிசார் வழக்கை விசாரித்து வருவதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நாகரீகத்துடன் பிரச்சாரம் செய்யவும், மற்றவர்களைத் தூண்டுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் மேலதிக விசாரணைகளும் நடந்து வருகின்றன என்று அவர் இன்று கோக் லானாஸ் காவல் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்1

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *