கொச்சியில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களை நாயை போல் சித்ரவதை!

- Muthu Kumar
- 06 Apr, 2025
கொச்சியில் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் விற்பனை இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை நாயைப் போல கழுத்தில் பெல்ட்டால் இறுக்கி முட்டுக்கால் போட்டு நடக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சிலருக்கு நேற்று வாட்ஸ் ஆப்பில் ஒரு காணொளி வந்தது. அதில் சில வாலிபர்களை கழுத்தில் பெல்ட்டால் இறுக்கி அவர்களை முட்டுக்காலில் இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் இருந்தன.
அந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கொச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் தான் இந்தக் கொடுமை நடந்தது என தெரியவந்தது. இது வீட்டு உபயோகப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. ஊழியர்களுக்கு நடந்த இந்த கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *