கென்யாவில் நடு ஊருக்குள் விழுந்த மர்ம வளையம்!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கென்யாவில் சுமார் 500 கிலோ எடையுள்ள மர்மப் பொருள் திடீரென விழுந்தது அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.கடந்த பல ஆண்டுகளாகவே ஏலியன்கள் மற்றும் வானில் சுற்றும் மர்மப் பொருட்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேச்சுகள் எழுந்து வருகிறது. அதிலும் சமீப காலமாக அமெரிக்காவில் இது தொடர்பான தகவல்கள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீரென வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.
தென்கொரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் வானில் இருந்து ஒரு மர்மப் பொருள் விழுந்துள்ளது. வானில் இருந்து ஏதோ ஒன்று விழுவது போலப் பலத்த சத்தம் கேட்ட நிலையில், சிவப்பு நிறத்தில் மர்மப் பொருள் அங்கு விழுந்துள்ளது. உடனடியாக அது என்னவென்று பார்க்கக் கிராம மக்கள் அருகே சென்றுள்ளனர். சிவப்பு நிறத்தில் ஏதோ வளையம் போல அது இருந்துள்ளது.
பொதுவாக சினிமாக்களில் ஏலியன்கள் வரும் ஸ்பேஸ் ஷிப்கள் வட்டமாகவே இருக்கும். எனவே, அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்று சிலர் நினைத்து அஞ்சினர். மேலும், அதன் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு அது சூடாக இருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகக் கென்யா விண்வெளி நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குப் புறப்பட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்கச் சிவப்பு நிறத்தில் இருந்த அந்த ரிங் மெல்ல நிறம் மாற தொடங்கியுள்ளது. அது மெல்ல அப்படியே சில்வர் கலருக்கு மாறியது. அதன் வெப்பமும் குறையத் தொடங்கியது. அதற்குள் அதிகாரிகள் அங்கு வந்துவிட்டனர். விண்வெளியில் இருந்து வந்து விழுந்த இந்த மர்ம பொருளை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கென்யா விண்வெளி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கென்யாவின் மகுவேனியின் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான முக்குகு (Mukuku) என்ற இடத்தில் விழுந்த பொருளைக் கென்யா விண்வெளி நிறுவனம் இப்போது ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2.5 மீட்டர் (சுமார் 8 அடி) அகலம் கொண்ட இந்த ரிங். சுமார் 500 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இது விண்வெளியில் சுற்றி வந்த பொருளின் ஒரு பகுதி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராக்கெட்டில் இருந்து ஏவுகணையைப் பிரிக்கும் இடத்தில் இதுபோன்ற ரிங் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது வானில் இருந்து அதீத வேகத்தில் வந்ததால் தான் அது சிவப்பு நிறத்தில் மாறியிருக்கிறது. அதன் வெப்பம் குறைந்ததும் அது வழக்கமான நிறத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. இதை ஆய்வாளர்கள் விண்வெளிக் குப்பை எனக் குறிப்பிடுகிறார்கள். விண்வெளிக் குப்பைகள் மணிக்கு சுமார் 36 ஆயிரம் கிமீ வேகத்தில் பூமியில் வந்து விழும். இது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் விழுந்தால் பேரழிவு ஏற்படும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்களும், சீன ராக்கெட்களின் பகுதிகளும் இதுபோல பூமியில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *