நஜீப்பின் 1MDB வழக்கில் Tan Sri Razarudin Husain!

top-news

ஏப்ரல் 17,


முன்னாள் பிரதமர் நஜீப்பின் 1MDB ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையில் தேசிய காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husain நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வர வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் சம்மன் அனுப்பியிருப்பதை உள்துறை அமைச்சின் சட்ட ஆலோசகர் Datuk Collin Lawrence Sequerah இன்று உறுதிப்படுத்தினார். நஜீப்பின் ஊழல் வழக்கு கைது நடவடிக்கையின் போது தேசிய காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husain விளக்கமளிக்க வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் வலியுறுத்திய நிலையில் Tan Sri Razarudin Husain நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வேண்டிய எநதவோர் அவசியமும் இல்லை என்றும் இது தொடர்பான மேல்முறையீட்டை உள்துறை அமைச்சு மேற்கொள்ளவிருப்பதாகவும் உள்துறை அமைச்சின் சட்ட ஆலோசகர் Datuk Collin Lawrence Sequerah தெரிவித்தார்.

1MDB ஊழல் வழக்கின் விசாரணை மட்டுமே 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தேசிய காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husainக்குச் சம்மன் அனுப்பியிருப்பது மேலும் வழக்கின் விசாரணையைக் காவல் துறையின் பக்கம் திருப்பி விசாரணையைத் தாமதப்படுத்தும் உக்தி என உள்துறை அமைச்சின் சட்ட ஆலோசகர் Datuk Collin Lawrence Sequerah தெரிவித்தார். ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை நீதிமன்ற விசாரணைக்கு வரவழைக்க எதிர்நோக்கும் சிக்கல்களை இது மேலும் தாமதப்படுத்தும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்த காவல் அதிகாரிகள் முன்னமே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் தொடர்ந்து வழக்கைத் தாமதப்படுத்த வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சின் சட்ட ஆலோசகர் Datuk Collin Lawrence Sequerah வலியுறுத்தினார்.

Peguam Najib telah mengemukakan saman terhadap Ketua Polis Negara, Tan Sri Razarudin Husain, untuk hadir beri keterangan dalam kes 1MDB. Kementerian Dalam Negeri mempertikaikan keperluan ini dan menyifatkannya sebagai usaha melengah-lengahkan perbicaraan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *