பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைக்கும் பழங்காலத்து பொக்கிஷ்ங்கள்!
- Muthu Kumar
- 24 Jul, 2024
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. கோட்டையின் மையப்பகுதியல் உள்ள அரண்மனை திடலுக்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள 6 புதிய அகழாய்வு குழிகளில் B21 எனும்
குழியில் செங்கல் தளம் ஒன்று வெளிப்பட்டது.
தென்கிழக்கு மூலையில் வெளிப்பட்ட இந்த செங்கல் தளம் 280 செ.மீ நீளம் மற்றும் 218 செ.மீ அகலம் கொண்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்கு உள்ளாகவே 424 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இவை கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், இரும்பு பொருட்கள் மற்றும் செப்புப் பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வானது தொடங்கி 26 நாட்களாக
நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கண்ணாடி மணிகள், மாவுக் கல் மணிகள், பளிங்கு கல் மணிகள், உட்பட 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன.
சங்ககாலம் என்கிற தொடக்க வரலாற்றுக் கால தொல்லியல் தளங்களான அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், கீழடி, கொற்கை போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. சூதுபவளம் மற்றும் அகேட் கல்மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கிடைக்கின்றன. அண்மையில் செம்பு ஆணிகளும் கண்ணிற்கு மை தீட்டும் அஞ்சணக்கோல் கிடைத்துள்ள நிலையில் நேற்று சூதுபவள மணிகளும் அகேட் வகை மணிகளும் கிடைத்துள்ளது சிறப்பாகும். தற்போது பெற்பனைக்கோட்டை அகழாய்வில் தொடர்ந்து செம்பினால் ஆன பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *