ஒபன் ஏஐ நிறுவன முறைகேட்டை தெரியப்படுத்திய இந்திய-அமெரிக்கர் மரணம்!

- Muthu Kumar
- 14 Dec, 2024
சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில், ஒபன் ஏஐ நிறுவனத்தின் முறைகேட்டை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர் சுச்சீர் பாலாஜி கடந்த நவம்பர் 26 ஆம் தேதியன்று மரணமடைந்ததாக செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பமான சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஒபன் ஏஐ--யில் நான்கு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளரான பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஒபன் ஏஐ அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்தை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவர் ராஜினாமா செய்தார்.
மேலும் , அவரது ராஜினாமா குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்ததுடன், ஒபன் ஏஐ அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்தைமீறி முறைகேட்டில் ஈடுபட்டதாகக்கூறி பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதியன்று, சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள அவரது விட்டில் அவர் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து எந்தவொரு தகவலும் இல்லாததைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்ற அந்நகர காவல்துறையினர் அவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் உயிரிழந்த செய்தி தற்போது வெளியாகியுள்ள நிலையில்,அதற்கான காரணம் முழுமையாக இன்னும் மருத்துவ அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் உயிரிழந்ததற்கு முந்தைய நாள் (நவ.25) அன்று ஓபன்ஏஐக்கு எதிரான பதிப்புரிமை வழக்கில் பாலாஜி என்ற பெயரில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *