கனடாவில் பெரிய தங்க கடத்தலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் கைது!
- Muthu Kumar
- 13 May, 2024
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் பண மோசடியுடன் தொடர்புடைய 36 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு நபரை கனடா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளையில், லட்சக்கணக்கான டாலர் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் கனடிய கரன்சி ஆகியவை அடங்கும்.
கைது செய்யப்பட்ட நபர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில், திருட்டு தனத்திற்கு உதவுவதற்காக தங்கள் அலுவலக உள் தகவல்களை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு முன்னாள் ஏர் கனடா ஊழியர்களும் அடங்குவர்.
திருடப்பட்ட பொருட்களில் 6,600 கிலோ தூய தங்கக் கட்டிகள் மற்றும் சுமார் $2.5 மில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் அடங்கும்.
சுவிட்சர்லாந்தின் Zurich-லிருந்து Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த சரக்கு வந்தடைந்தது, ஆனால் பாதுகாப்பான சேமிப்பு இடத்தை அடைவதற்கு முன்பே காணாமல் போனது.
பல கைதுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், கூடுதல் சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
சிம்ரன் ப்ரீத் பனேசர், மற்றொரு முன்னாள் ஏர் கனடா ஊழியர், ஆர்சித் கரோவர் மற்றும் அர்சலான் சௌத்ரி ஆகியோருக்கு கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *