துருக்கிக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுக்கும் இந்தியா!

top-news
FREE WEBSITE AD

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி.

துருக்கியில் இருந்து ட்ரோன்கள மற்றும் ஏவுகணைகளை வாங்கி பாகிஸ்தான் இந்தியா மீது ஏவியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அந்த ஏவுகணைகள் அனைத்தையும் இந்தியாவின் சுதர்சன சக்கரா மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் மறித்து தாக்கியதால், இந்தியாவுக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டு கொண்டிருக்கும் செய்திகள் வெளியானவுடன், இந்தியா அதிருப்தி அடைந்தது. இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கும் துருக்கி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “இனிமேல் துருக்கி நாட்டுடன் எந்த விதமான வர்த்தகமும் செய்ய மாட்டோம்” என்று வணிகர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, துருக்கியில் இருந்து வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கு ஆப்பிள் இறக்குமதி செய்த இந்திய வணிகர்கள், இனிமேல் துருக்கியில் இருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர். இதனால் துருக்கிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக, தற்போது ராஜஸ்தானில் உள்ள மார்பிள்ஸ் வியாபாரிகள், “துருக்கியுடன் இனிமேல் வர்த்தகம் செய்ய மாட்டோம்” என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மார்பிள்ஸ் வணிகர் சங்கத்தினர், இது குறித்து கூறிய போது, பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்ததால், துருக்கியில் உள்ள வணிகத்தை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் மார்பிள்ஸ் வணிகம் செய்வது இந்திய வணிகர்களே எனவும், ஆனால் இனிமேல் துருக்கி உடன் எந்த விதமான வணிகத்தையும் தொடர மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். துருக்கியில் தயாராகும் மார்பிள்ஸ்களில் 70% இந்தியாவுக்கு தான் இறக்குமதி செய்யப்படுகிறது. 14 முதல் 16 லட்சம் டன்கள் இந்திய வணிகர்கள் துருக்கியில் இருந்து மார்பிள்ஸ் இறக்குமதி செய்த நிலையில், தற்போது அவை சுத்தமாக நின்று போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளதால், துருக்கி வணிகர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

இந்தியா மற்றும் துருக்கி இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில், பாகிஸ்தானால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக துருக்கி வணிகர்கள் கூறி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போது, முதல் நாடாக இந்தியா தான் உதவி செய்தது. அதேபோல், நிவாரண பொருட்கள் மற்றும் பண உதவி செய்த நிலையில், அதற்கு நன்றி காட்டாமல் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்வது சரியானதா என கேள்வி எழுந்துள்ளது.

இந்திய வணிகர்கள் இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே எந்த விதமான போக்குவரத்து நடைபெறாது என்பதால், துருக்கி வணிகர்களுக்கும் துருக்கியின் நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து, துருக்கி அரசு இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *