துபாயில் விடிய விடிய கனமழை!

top-news

துபாயில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடிய விடிய கனமழை பெய்தது.. 

காலநிலை மாற்றத்தால் எங்கோ பெய்ய வேண்டிய மழை,, எங்கோ பெய்வது. அதுவும் குறைந்த நேரத்தில் மிக அதிக மழை பெய்வது உலகம் முழுவதும் நடக்கிறது... சீரற்ற முறையில் தட்பவெப்ப நிலை மாறுகிறது... கடுமையான வெயில், அதீத மழை, மோசமான வறட்சி என சுற்றுச்சூழல் பாதிப்பால் உலகமே பாதிப்பை சந்தித்துள்ளது

அதன் தாக்கம் தற்போது துபாயில் தெரியவந்துள்ளது. துபாயின் அமீரகத்தில் நேற்று அபுதாபி, அல் அய்ன், துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளின் பல சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

துபாயில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபடி இருந்தது. இதனால் அங்கு வாகனங்கள் மெதுவாக நகர்ந்துதான் சென்றன. சார்ஜா மற்றும் அஜ்மானிலும் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளமாக மாறியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு தவித்தார்கள்..


இந்நிலையில்  துபாய் சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், கனமழை மற்றும் மக்களின் பாதிப்பு குறித்து காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் கார்கள் பல தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.. மழையோ அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் கொட்டுகிறது.. சாலைகளை பார்க்கும் போது, சாலை தானா அல்லது காட்டாற்று வெள்ளம் போகும் வழித்தடமா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. அற்புதமான சாலைகளை.. அப்படியே மூழ்கடித்து, ஒன்றுமில்லாமல் செய்தது மழை.. துபாயில் பெய்துள்ள இந்த மழை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.. 

இதேவேளை துபாய் விமான நிலையத்தில் இருந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது.இந்நிலையில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *