யூடியூப்பைத் தட்டித் தூக்க வருகிறது எக்ஸ் டிவி!
- Tamil Malar (Reporter)
- 25 Apr, 2024
எலான் மஸ்க் (Elon
Musk) ட்விட்டர் தளத்தை வாங்கிய
நாள் முதலே பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளார்.
அதாவது இந்த
டிவிட்டர் தளத்திற்கு எக்ஸ் என்று பெயரிட்டு பல்வேறு புதிய அம்சங்களை
சேர்த்துள்ளார். குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சங்களும்
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இந்நிலையில்
யூடியூப் தளத்திற்குப் போட்டியாக புதிய டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது எலான்
மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம். அதாவது ஸ்மார்ட் டிவிகளில் எப்படி யூடியூப் பார்க்க
முடியுமோ, அதேபோல் ஸ்மார்ட்
டிவிகளில் எக்ஸ் டிவி ஆப் (X TV App) பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எக்ஸ்
டிவி ஆப் ஆனது யூடியூப் போன்றே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், இதனால் யூடியூப் தளத்திற்கு போட்டியாக இந்த
எக்ஸ் டிவி ஆப் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எக்ஸ்
வலைத்தளம் உருவாக்கி வரும் பிரத்யேக டிவி ஆப் ஆனது யூடியூப்பிற்கு சவால் விடும்
வகையில் இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ (Linda
Yaccarino) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும்
இதுகுறித்து அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டது என்னவென்றால், சிறிய திரையிலிருந்து பெரிய திரை வரை உள்ள
அனைத்தையும் இந்த எக்ஸ் மாற்றிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் நாங்கள் எக்ஸ்
டிவி ஆப் மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளடக்கத்தை நிகழ்நேரத்தில் கொண்டு
வருவோம்.
குறிப்பாக இந்த
எக்ஸ் டிவி ஆப் வசதியானது பெரிய ஸ்கிரீனில் உயர்தர மற்றும் அதிவேக பொழுதுபோக்கு
அனுபவத்தை வழங்கும். இதற்காக எக்ஸ் டிவி ஆப் வசதியை இன்னும் மேம்படுத்தலுடன்
உருவாக்கி வருகிறோம். நீங்கள் எதிர்பார்க்க கூடிய அனைத்து அம்சங்களும் இந்த எக்ஸ்
டிவி ஆப் வசதியில் இருக்கும் என்று லிண்டா யாக்காரினோ தெரிவித்துள்ளார். மேலும்
இதுகுறித்து ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏற்கனவே
வெளியான தகவலின்படி, முதலில் இந்த
எக்ஸ் டிவி ஆப் Fire OS (அமேசான்) மற்றும்
Tizen OS (சாம்சங்)
ஆகியவற்றில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் என்றும் பின்னர் தான்
அனைத்து இயங்குதளம் கொண்ட டிவிகளுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது
இந்த எக்ஸ் டிவி ஆப் ஆனது சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட
அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் எக்ஸ்
(ட்விட்டர்) தளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் லாங்க் பார்மேட் இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்பது தான் எலான்
மஸ்க் திட்டம். இதை அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வரும் வேளையில்
ட்விட்டரில் (எக்ஸ்) தற்போது ஒவ்வொருவரும் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது.
மேலும் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் நீண்ட நேர க்களை பெரிய
திரையில் பார்க்க ஸ்மார்ட் டிவிகளுக்கான எக்ஸ் டிவி ஆப் விரைவில் கொண்டுவரப்பட
உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *