தோல்வி அடைந்தாலும் கட்சியில் உறுப்பினர்களாகவே இருப்போம்! - Nik Nazmi

top-news

மே 26,

கட்சித் தேர்தலில் அடைந்திருக்கும் தோல்வியை முழுமையாக ஏற்பதாக அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான Nik Nazmi தெரிவித்தார். என்னுடைய 19 வயதில் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அப்படி தொடங்கியது முதல் இப்போது வரையிலும் பி.கே.ஆர் கட்சியில் மட்டுமே இருந்து வருகிறேன், இனிமேலும் நான் பி.கே.ஆர் கட்சியில் தான் இருப்பேன் என Nik Nazmi வலியுறுத்தினார். கட்சித் தேர்தலில் அடைந்திருக்கும் தோல்வியால் நான் சோகமாக இருந்தாலும் இந்த கட்சியின் மீதும், உறுப்பினர்கள் மீது தாம் எந்த வகையிலும் கோபம் கொள்ளவில்லை என Nik Nazmi விளக்கமளித்தார். 

அரசியலில் என்னுடைய பயணம் எங்கு தொடங்கியதோ அங்கேயே தான் இருக்கும் என்றும் எனது அரசியல் நிலைப்பாடு என்றென்றும் மாறாது என்றும் Nik Nazmi குறிப்பிட்டார். இப்போது அமைச்சராக இருக்கிறேன், ஆனால் நான் அமைச்சராக இருப்பதை விடவும் பி.கே.ஆர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன், என்னுடைய இந்த தோல்வி என்பது எதார்த்தமானது என்றும் பி.கே.ஆர் கட்சியினுடனான நீண்ட பயணத்தில் ஒரு திருப்பு முனை மட்டுமே இது என Nik Nazmi குறிப்பிட்டார்.

Nik Nazmi menerima kekalahan dalam pemilihan PKR dengan hati terbuka dan menegaskan kesetiaannya kepada parti. Beliau menolak rasa kecewa atau marah, dan menyifatkan kekalahan ini sebagai satu titik perubahan dalam perjalanan politiknya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *